வளர்ச்சியை உறுதி செய்வதே மிகப்பெரிய பொறுப்பு: ரிசர்வ் வங்கி கவர்னர்
வளர்ச்சியை உறுதி செய்வதே மிகப்பெரிய பொறுப்பு: ரிசர்வ் வங்கி கவர்னர்
UPDATED : டிச 11, 2024 09:16 PM
ADDED : டிச 11, 2024 09:10 PM

மும்பை:' நாடு உண்மையில் பெற்றுள்ள வளர்ச்சியை உறுதி செய்வதே நமக்கு இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு,' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் மல்ஹோத்ரா கூறினார்.
மத்திய வருவாய்துறை செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ராவை, ரிசர்வ் வங்கி கவர்னராக மத்திய அரசு நியமித்தது.சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரிசர்வ் வங்கியின் 26 வது கவர்னராக பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து சஞ்சய் மல்ஹோத்ரா அளித்த பேட்டி: நாடு பெற்றுள்ள வளர்ச்சியை உறுதி செய்வதே நம்முன் உள்ள மிகப்பெரிய பொறுப்பு. 2047க்குள் வளர்ந்த தேசம் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, பொருளாதாரம் இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பது, கொள்கை வகுப்பதில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது ஆகியவை முக்கியம். ஆகவே அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கொள்கையில் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமானது. அது வரிவிதிப்புக் கொள்கையாக இருந்தாலும், நிதிக் கொள்கையாக இருந்தாலும் சரி, பணக் கொள்கையாக இருந்தாலும் சரி, எல்லா வணிகங்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் ஒரு அன்றாட கொள்கையை விட தொடர்ச்சியும் ஸ்திரத்தன்மையும் தேவை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.