சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை
ADDED : நவ 06, 2024 06:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிஸ்ஹசாரி:பத்து வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி, 2017 ஜூன் 4ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன், சிறுமியை தன் வீட்டுக்குத் துாக்கிச் சென்று, பலாத்காரம் செய்தான். புகாரின்பேரில் சிறுவனை போலீசார் கைது செய்து, போக்ஸோ சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுசீல் பாலா தாகர், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10.5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.