ADDED : ஏப் 05, 2025 02:17 AM
இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு, மார்ச் 10ல் துவங்கி நடைபெற்று வந்தது. கடைசி வாரத்தில், மிக முக்கிய திட்டமான வக்ப் மசோதாவை மத்திய அரசு கையில் எடுத்தது.
இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பினாலும், அதை ஒருபொருட்டாக கருதாமல், மிக முக்கியமான இந்த மசோதாவையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தது.
தொடர்ச்சியான அலுவல்களுக்கு மத்தியில், இறுதி நாளான நேற்று மிகவும் களைத்துப்போய், எம்.பி.,க்கள் அனைவரும் சோர்வு மற்றும் துாக்க கலக்கத்துடன் சபைகளுக்கு வந்திருந்தாலும், அமளிக்கு மட்டும் குறைச்சல் ஏற்படவில்லை.
பார்லி., இரு சபைகளிலும் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் வக்ப் மசோதா, மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் பணியிட நியமன மோசடி ஆகிய விவகாரங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு சபைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
- நமது டில்லி நிருபர் -

