வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு
வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு
ADDED : மே 04, 2024 04:50 PM

புதுடில்லி: போதுமான அளவு உற்பத்தி காரணமாக வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் மத்திய அரசு விலக்கிக் கொண்டது.
உள்நாட்டில் விலை ஏற்றம் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக கடந்த ஆண்டு டிச.,8 முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் மூலம் ராபி பருவ சாகுபடி வரை வெங்காயத்தின் விலை சீராக இருந்தது.
இந்நிலையில் கரீப் பருவத்தில் வெங்காயம் உற்பத்தி போதுமான அளவு மற்றும் பருவமழை குறித்த அறிக்கையும் சாதகமாக உள்ளது. இதனையடுத்து,வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நேற்று முதல்( மே03) விலக்கிக் கொண்டது.
ராபி பருவத்தில் 191 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. உள்நாட்டின் தேவையாக 17 லட்சம் டன் மட்டும் போதுமானதாக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.