
மத்திய அரசின் அதிகாரப் போக்கே, 'இண்டிகோ' விமான நிறுவனத்தின் படுதோல்விக்கு காரணம். விமானங்கள் தாமதமானாலோ, ரத்தானாலோ பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான். அனைத்து துறைகளிலும் நியாயமான போட்டி இருப்பது அவசிய ம். இதில், மத்திய அரசு அதிகாரம் செலுத்தக்கூடாது.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
கால நீட்டிப்பு இல்லை!
நாடு முழுதும், 1.51 லட்சத்திற்கும் மேற்பட்ட வக்ப் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை, ஆன்லைனில் பதிவு செய்யும் காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், அதற்கான தேதியை நீட்டிக்க முடியாது. எனவே, பதிவு செய்யாதவர்கள், அந்தந்த தீர்ப்பாயத்தை நேரில் அணுகலாம்.
கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
சமூக கட்டமைப்பை பாதிக்கும்!
கல்லுாரிகளில் கல்வித்தகுதியை புறக்கணித்து, மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கும் நடைமுறை தவறானது. இது, நம் நாட்டின் சமூக கட்டமைப்பை பாதிக்கும். ஜம்மு - காஷ்மீர் அனைவருக்கும் சொந்தமானது. இதுபோன்ற பிளவுபடுத்தும் செயல்கள், மிகுந்த கவலை அளிக்கின்றன.
மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

