ADDED : ஜன 27, 2024 01:24 AM
புதுடில்லி:டில்லியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் 19 பேருக்கு, தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ததற்கான விருது வழங்கப்பட்டது.
நாட்டின் 14வது தேசிய வாக்காளர் தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. டில்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் நடந்த விழாவில், வடமேற்கு மாவட்ட கலெக்டர் அங்கிதா ஆனந்த்துக்கு சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரி விருது வழங்கப்பட்டது.
அதேபோல, மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்த நம்கியால் அங்மோ ஐ.ஏ.எஸ்., உட்பட மொத்தம் 19 பேருக்கு விருது வழங்கிய டில்லி தலைமை தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ''ஒவ்வொரு ஆண்டும் வாக்காளருக்கான தகுதியை அடையும் இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
''மேலும், தேர்தலில் தவறாமல் வாக்களித்து நம் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். தங்களின் பங்கேற்பு ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமானது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்,'' என்றார்.
டில்லியைச் சேர்ந்த ஐந்து புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

