ADDED : ஏப் 25, 2025 04:45 AM

பஹல்காமில் நடந்த தாக்குதல், ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது; இது ஒரு கொடூரமான செயல். இதை கடுமையாக கண்டிக்கிறேன். அனைவரும் இதை கண்டிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது.
- நிதிஷ் குமார்
பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்
இணைந்து எதிர்ப்போம்!
ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும். பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளை தண்டிக்க வேண்டும். அசாமில் வசிக்கும் சிலர் மறைமுகமாக பாகிஸ்தானை ஆதரித்து வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,
உள்துறையின் தோல்வி!
பஹல்காம், பாகிஸ்தான் எல்லையிலிருந்து தொலைவில் உள்ளது. அதுவரை பயங்கரவாதிகள் ஊடுருவி, பிரபல சுற்றுலா தலத்தில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அதுவரை எந்த தகவலும் அரசுக்கு கிடைக்கவில்லை. இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முழுமையான தோல்வியாகும்.
- குணால் கோஷ்
மூத்த தலைவர், திரிணமுல் காங்.,

