நாட்டின் முதல் புல்லட் ரயில் அடுத்தாண்டு இயக்கப்படும்
நாட்டின் முதல் புல்லட் ரயில் அடுத்தாண்டு இயக்கப்படும்
ADDED : ஜன 01, 2026 11:56 PM

புதுடில்லி: ''நாட்டின் முதல் புல்லட் ரயில், சூரத் - பிலிமோரா இடையே 2027 ஆக., 15ல் இயக்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
கிழக்காசிய நாடான ஜப்பான் கடனுதவியுடன், மும்பை - ஆமதாபாத் இடையே, 508 கி.மீ., துாரத்துக்கு, அதிவேக புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் இயங்கும் வகையில், இந்த ரயில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த ரயில் திட்டத்துக்கு, 2017ல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த, 2023 டிசம்பருக்குள் பணியை முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளால் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல் புல்லட் ரயில் சேவை அடுத்த ஆண்டு ஆக., 15ல் துவங்கும் என பா.ஜ.,வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார்.

