ADDED : பிப் 19, 2025 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தெற்கு டில்லி சைனிக் பார்ம், லடோ சராய் தகன மையம் அருகே, எரிந்த நிலையில் ஒரு உடல் கிடந்தது. அது, பல்வேறு குற்றங்களில் தொடர்புள்ள சுபாஷ்,40, என்பது சாகேத் போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.