ADDED : ஏப் 11, 2026 11:47 PM

மேற்கு வங்கத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதற்கு வரும் தேர்தலில் முடிவு கட்டப்படும். பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், மம்தா ஆட்சியில் பெண்களுக்கு நடந்த துன்புறுத்தல்கள் குறித்து உடன டியாக விசாரணை நடத்துவோம். இந்த முறை மம்தாவை வீட் டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.
அமித் ஷா மத்திய அமைச்சர், பா.ஜ.,
கடும் நடவடிக்கை!
ஜம்மு - காஷ்மீரில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களின் ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், அவர்களின் சொத்துக்களும் முடக்கப்படும். இதில் எவ்வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
மனோஜ் சின்ஹா ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர்
மீன் ஏற்றுமதி உயர்வு!
இறக்குமதி வரிகளை அமெரிக்கா விதித்ததால், புதிய சந்தைகளை நம் நாடு தேடியது. இதனால், நாட்டின் மீன்வள ஏற்றுமதி, 60,000 கோடி ரூபாயில் இருந்து, 68,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுக ளில் மீன்வள ஏற்றுமதி யில், 1 லட்சம் கோடி ரூபாயை எட்டுவதை அரசு இலக்காக வைத்துள்ளது.
சத்யபால் சிங் பாகேல் மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
