உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 29, 2026 08:36 AM

அ நிறம் | அளவு
'இன்ஸ்டாகிராம்' பிரபலம் சூரஜ் சுக்லா பகிர்ந்த இன்னொரு வீடியோ, நேற்று வேகமாக பரவியது. மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில், தள்ளு வண்டியில் பானை விற்ற பெண் வியாபாரி ஒருவர், கன மழையில் சிக்கினார். அவரது வண்டி சரிந்து, பானைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை கண்ட, அந்த வழியில் சென்றவர்கள், பானைகளை மீட்டுக் கொடுத்தனர்.
தன் உழைப்பை மீட்டுக் கொடுத்த அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அந்த பெண் நன்றி தெரிவிக்கும் இந்த வீடியோ, இணையத்தில் ஏராளமானோர் பாராட்டை பெற்றுள்ளது. 'மழையில் நனைந்த மண் பானைகள், மனிதர்கள் யார் என்பதைக் காட்டியிருக்கின்றன' என்கின்றனர், வலைதள பிரியர்கள்.
