காஷ்மீர், ஹரியானாவில் சட்டசபை தேர்தல் எப்போது தெரியுமா?
காஷ்மீர், ஹரியானாவில் சட்டசபை தேர்தல் எப்போது தெரியுமா?
UPDATED : ஆக 16, 2024 03:59 PM
ADDED : ஆக 16, 2024 03:39 PM

புதுடில்லி: காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாகவும் (செப்.,18,25, அக்.,01) , ஹரியானா சட்டசபைக்கு அக்.,01 ல் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் அக்., 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஆய்வு
90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு வரும் செப்., மாதத்திற்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அம்மாநிலத்திற்கான சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி அம்மாநிலத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதன்படி தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
காஷ்மீர்
ஹரியானா
இரு மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் அக்., 04ல் எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.