ADDED : டிச 15, 2025 12:13 AM

லோக்சபா முதல் பஞ்சாயத்து தேர்தல் வரை ஒரு காலத்தில் ஆட்சி செய்த காங்கிரசின் தற்போதைய வீழ்ச்சிக்கு, ஊழலே காரணம். மக்களின் வரிப் பணம், அவர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்; அது, ஊழலுக்கானது அல்ல. ஊழலில் ஈடுபடுவோ ர் எந்தச் சூழ்நிலையிலும் தப்ப முடியாது.
- பஜன்லால் சர்மா, ராஜஸ்தான் முதல்வர், பா.ஜ.,
பா.ஜ., ஏன் பதிலளிக்கிறது?
தேர்தல் கமிஷன் குறித்து கேள்விகள் எழுப்பினால், பா.ஜ., ஏன் பதில் அளிக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் அதன் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டும். அதன் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் மறைந்து வருகிறது.
- சச்சின் பைலட், மூத்த தலைவர், காங்கிரஸ்
ஊடுருவலுக்கு ஆதரவு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிராக காங்., நடத்தும் போராட்டம், ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில், அக்கட்சி இரட்டை வேடம் போடுவதுடன், அரசியல்மயமாக்குகிறது. பார்லி.,யில் விவாதத்திற்கு பின்பும்கூட, காங்., போராட்டத்தில் ஈடுபடுகிறது.
- சம்பித் பத்ரா, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

