ADDED : டிச 23, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி கடும் குளிரால் உறைந்தது.
ஜம்மு - காஷ்மீரில், வழக்கத்தை விட இந்த முறை அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், ஸ்ரீநகரில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான தால் ஏரி, கடும் குளிரால் உறைந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, ஸ்ரீநகரில் குறைந்தபட்சமாக, மைனஸ் 7 டிகிரி செல்ஷியஸ், அதிகபட்சமாக 7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும், வரும் நாட்களில் கடுமையான குளிர் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் கடுங்குளிரால், பொது மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

