தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/முதல் தனியார் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் 2027 மார்சில் விண்ணில் பாய்கிறது

முதல் தனியார் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் 2027 மார்சில் விண்ணில் பாய்கிறது

முதல் தனியார் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் 2027 மார்சில் விண்ணில் பாய்கிறது


UPDATED : நவ 25, 2026 08:09 PM

ADDED : நவ 25, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 08:09 PM ADDED : நவ 25, 2026 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் முதல் தனியார் நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி., ராக்கெட், அடுத்த ஆண்டு மார்சுக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை எச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்’ மற்றும் எல் அண்ட் டி எனப்படும், ‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை வடிவமைத்து அதிகம் பயன்படுத்தி வருகிறது. பல்வேறு வகையான செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்துவதில் இந்த ராக்கெட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இஸ்ரோவின் நம்பகமான ராக்கெட்டாக உள்ளது.

தற்போது விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தனியாருக்கு ஒப்பந்தங்கள் வழங்கி ராக்கெட்டுகளை தயாரித்து வாங்குவதற்காக, ‘நியூஸ்பேஸ் இந்தியா’ என்ற நிறுவனமும் அரசால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் ஐந்து பி.எஸ்.எல்.வி., – எக்ஸ்.எல்., ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கான 860 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை, ‘எச்.ஏ.எல்., – எல் அண்ட் டி' நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு வழங்கியது.

இந்த கூட்டமைப்பு தயாரித்து வரும் முதல் பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை 2027 மார்சுக்குள் விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us