ADDED : பிப் 19, 2024 07:18 AM
பெங்களூரு: கடன் கொடுக்காமல் ஓடியவரின் வீட்டை ஏலம் விட, வங்கிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு பொம்மனஹள்ளி பேகூரின், நஞ்சுண்டப்பா லே -- அவுட்டில் வசிப்பவர் நஞ்சுண்டையா, 48. இவர் தேவைக்காக, தன் வீட்டை அடமானம் வைத்து, பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினார். மொத்தம் 21 வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார்.
கடனை அடைக்காமல் தலைமறைவாகி விட்டார். கடனை வசூலிக்க வீட்டை ஏலம் விட, வங்கிகள் போட்டி போடுகின்றன.
நஞ்சுண்டையா வீட்டின் சுவற்றில், 'இந்த வீடு எங்கள் வங்கிக்கு சொந்தமானது' என, நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. வீட்டின் கேட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சிறிய தொகை கடன் கொடுக்கவே, பல்வேறு ஆவணங்களை கேட்கும் வங்கிகள், நஞ்சுண்டையா வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளாரா என்பதை தெரிந்து கொள்ளாமல், ஆவணங்களை ஆய்வு செய்யாமல் கோடிக்கணக்கான ரூபாய் கடன் கொடுத்திருப்பது, சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது.

