sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புத்தக பிரியர்களின் எண்ண ஓட்டம்

/

புத்தக பிரியர்களின் எண்ண ஓட்டம்

புத்தக பிரியர்களின் எண்ண ஓட்டம்

புத்தக பிரியர்களின் எண்ண ஓட்டம்


ADDED : டிச 21, 2024 02:36 AM

Google News

ADDED : டிச 21, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமலரின் பெருமை

தமிழ் புத்தகக் கண்காட்சியின் துவக்கமே அசத்தலாக உள்ளது. நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆன்மிகம், பண்டைய தமிழர் வரலாற்று புத்தகங்கள், என்னை வெகுவாக கவர்ந்தன. வரலாற்றுப் புத்தகங்களை நம் குழந்தைகளிடம் கொடுக்கும்போது, அவர்களுக்கு வரலாற்றின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தினமலர் நாளிதழின் தீவிர வாசகன் நான். ஆங்கில நாளிதழுக்கு நிகரானது தினமலர்.

இராசு. மாறன்,

பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்,

கல்லஹள்ளி

சிறு வயதிலிருந்தே...

பல இடங்களில் புத்தகக் கண்காட்சிக்கு சென்றுள்ளேன். ஆனால், பெங்களூரு நகரில் இவ்வளவு தமிழ் புத்தகங்கள் கிடைப்பது பெருமையாக உள்ளது. இதை பார்க்கும்போதே உச்சி குளிர்கிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். சிறு வயதில் இருந்தே, புத்தகம் வாசித்து வருகிறேன். வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களை விரும்பி படிப்பேன். 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தத்தை வாங்கி உள்ளேன்.

முருகேசன்,

மாரத்தஹள்ளி

மனைவிக்கு பரிசு

முதல் தடவையாக புத்தகக் கண்காட்சிக்கு வந்துள்ளேன். என் மனைவிக்கு புத்தகம் வாசிப்பு என்றால் இஷ்டம் அதிகம். மனைவிக்கு பரிசு அளிப்பதற்காக, 'யவன ராணி' எனும் புத்தகத்தை வாங்கியுள்ளேன். நானும், கவிதைகள் படிக்க துவங்கலாம் என கவிதை புத்தகம் வாங்கி உள்ளேன்.

சதீஷ்,

பனசங்கரி

நினைத்ததை விட அதிகம்

புத்தகக் கண்காட்சிக்கு வருவது வழக்கம். இம்முறை நிறைய தமிழ் புத்தகங்கள் உள்ளன. கர்நாடகாவில் தமிழ் புத்தகங்களை பார்ப்பதற்கே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கவிதை, உரைநடை இலக்கியம் உள்ளிட்ட புத்தங்கள் படிப்பது எங்களுக்கு பிடிக்கும். கவிதை புத்தகங்களின் தொகுப்பு, நினைத்ததை விட அதிகமாகவே உள்ளது. சிறுவயதில் இருந்தே இருவரிடமும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளது.

வீவஞ்சி வில்வநாதன், குறிஞ்சி (சகோதரிகள்)

கே.ஆர்.புரம்

விற்பனை அமோகம்

புத்தகங்கள் வாங்கும்போது, உங்கள் பணத்தை நீங்கள் செலவு செய்வதில்லை. உங்களது அறிவை பெருக்குவதற்கு முதலீடு செய்கிறீர்கள். புத்தகக் கண்காட்சி நடக்கும் நாட்களில் 5 நாட்கள் விடுமுறை நாட்கள் உள்ளன. இந்த விற்பனை சூடுபிடிக்கும். பெரும்பாலான வாசகர்கள் புத்தகத்தின் அட்டைப்படம், விலையை வைத்து புத்தகத்தை தேர்வு செய்கின்றனர். மற்றவர்களின் பரிசீலனையின்படி தேர்வு செய்தல் நன்றாக இருக்கும்.

துரைராசு, சென்னை






      Dinamalar
      Follow us