ADDED : மார் 21, 2025 03:41 AM

தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் பிரம்மோத்ஸவம் திருவிழா நிறைவு பெற்றது.
ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் முத்து மண்டப தேர் பவனி, நேற்று முன்தினம் இரவு நடந்தது.
நேற்று அதிகாலை பூக்கரக பவனி துவங்கியது. ராபர்ட்சன்பேட்டை விவேக் நகரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து சீனிவாஸ் என்பவர் பூக்கரகம் எடுத்து வந்தார்.
கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலுக்கு பூக்கரகம் வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அங்கிருந்து புறப்பட்டு பாரண்டஹள்ளி, சொர்ண குப்பம், சொர்ணா நகர், விவேக் நகர், உரிகம் பேட்டை, உரிகம், கோரமண்டல் பாட்டை கெங்கையம்மன் கோவில், சாம்பியன் ரீப், ஆண்டர்சன் பேட்டை, பழைய மாரிகுப்பம் ஆகிய இடங்களில் பவனி வந்தது.
அனைத்து இடங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று இரவு, விவேக் நகரில் கோவில் முன் தீ மிதி விழா நடந்தது. பூக்கரகம் குளத்தில் கரைக்கப்பட்டது.