UPDATED : ஜன 05, 2024 10:32 PM
ADDED : ஜன 05, 2024 10:23 PM

கோல்கட்டா
: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்., தொண்டர்களால்
தாக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை கவர்னர் அனந்த போஸ் மருத்துவமனையில்
சென்று ஆறுதல் கூறினார்.
மேற்கவங்கத்தில் ஆளும்
திரிணாமுல்காங்., கட்சி அமைச்சர் ஜோதிப்ரியோ மாலிக், 65. முன்னர்
உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, ரேஷன் வினியோகத்தில் பல
கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவருக்கு
நெருக்கமானவர்களுக்கு சொந்தமான, 15 இடங்களில்
அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் தொடர்புடைய
திரிணமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹான் வீட்டுக்கு
அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்த சென்ற போது கட்சி தொண்டர்களால்
கடுமையாக தாக்கப்பட்டனர். வாகனங்கள் சேதமடைந்தன. அதிகாரி ஒருவரின் மண்டை
உடைந்தது.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்து கோல்கட்டா
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கவர்னர்
அனந்தபோஸ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அதிகாரிகளுக்கு கவர்னர் ஆறுதல்
இது
தொடர்பாக கவர்னர் அனந்த போஸ் கூறியது, அமலாக்கத்துறை அதிகாரிகள்
மீது திரிணமுல் காங்., கட்சியினர் தாக்குதல் நடத்தியதை
பொறுத்துக்கொள்ள முடியாது; இது ஒரு மோசமான முன் உதாரணம். இந்த
விஷயத்தில் சட்டத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ,
அதை கண்டிப்பாக எடுப்பேன் என்றார்.