ADDED : ஜன 01, 2026 12:02 AM

அயோத்தி என்ற பெயரே போரிட இயலாத நகரம் என்ற பொருளைக் குறிக்கிறது. எதிர்க்கட்சியினர் இந்நகரத்தை அமைதியின்மை, மோதல்கள் நிறைந்த கலவர பூமியாக மாற்றிவிட்டனர். இதற்கு அவர்களின் பேராசை, மதவெறி, தாஜா செய்யும் அரசியலே காரணம்.
யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,
பெண்களுக்கு பாதுகாப்பில்லை!
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியுடன் குற்றவாளிகளுக்கு உள்ள தொடர்பால், இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது ஒன்றே மம்தா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் காட்டுகிறது.
சுவேந்து அதிகாரி மே.வங்க எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,
பெரிய பொருளாதார நாடு!
ஜப்பானை பின்னுக்கு தள்ளி நம் நாடு நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. ஆனால், 'இந்தியாவில் செயலற்ற பொருளாதாரம் நடைமுறையில் இருப்பதாக' காங்கிரசின் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பிரசாரம் செய்வது கண்டனத்துக்குரியது.
ஷெசாத் பூனாவாலா செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

