/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உயிர் பலியான உயர்மட்ட பாலம் குடிமகன்களால் தொடரும் அச்சம்
/
உயிர் பலியான உயர்மட்ட பாலம் குடிமகன்களால் தொடரும் அச்சம்
உயிர் பலியான உயர்மட்ட பாலம் குடிமகன்களால் தொடரும் அச்சம்
உயிர் பலியான உயர்மட்ட பாலம் குடிமகன்களால் தொடரும் அச்சம்
ADDED : ஜன 05, 2026 04:38 AM
கோபி: கோபி, கொடிவேரி தடுப்பணை அருகே செல்லும் பவானி ஆற்றின் குறுக்கே, அக்கரை கொடிவேரி-பெரிய கொடிவேரியை இணைக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 10.50 மீட்டர் அகலம், ஏழு மீட்டர் உயரம், 380 மீட்டர் நீளத்தில் உயர்-மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், உயர்மட்ட பாலத்தில், பைக் மற்றும் கார்களை நிறுத்தி, பட்டப்பகலில் மது அருந்துவது அதிகரித்துள்ளது. இதை போலீசார் கண்டுகொள்வதில்லை. பாலத்தின் கட்டமைப்பு பாலத்தின் மேல் மற்றும் அடிப்பகுதியில், பிளாட்பார்ம் என எங்கு பார்த்தாலும் காலி மதுபாட்டில்கள், பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர் சிதறி கிடக்கிறது.
உயர்மட்ட பாலத்து திண்டில் கடந்த டிச.,30ல் போதையில் படுத்திருந்த, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்-கேயன், 29, ஆற்றில் விழுந்து பலியானார். ஆனாலும் குடிம-கன்கள் அட்டகாசம் அடங்கவில்லை. அதே திண்டில் குடிம-கன்கள் அமர்ந்து குடிக்கின்றனர். கடத்துார் மற்றும் பங்களாப்-புதுார் போலீசார், ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

