காட்டு யானையுடன் மோதிய அர்ஜுனா ரத்தம் சொட்ட சொட்ட திகில் காட்சிகள்
காட்டு யானையுடன் மோதிய அர்ஜுனா ரத்தம் சொட்ட சொட்ட திகில் காட்சிகள்
ADDED : ஜன 31, 2024 07:37 AM

ஹாசன் : ரத்தம் சொட்ட சொட்ட, காட்டு யானையுடன், கும்கி அர்ஜுனா மோதிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை, எட்டு முறை சுமந்த பெருமையை பெற்றது கும்கி யானை அர்ஜுனா. கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி, ஹாசன் சக்லேஸ்பூர் யசலுார் காட்டு யானையை பிடிக்கும் பணியில் அது ஈடுபடுத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில், படுகாயம் அடைந்த அர்ஜுனா உயிரிழந்தது. அர்ஜுனாவின் மறைவு கர்நாடக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், காட்டு யானை, கும்கி அர்ஜுனா இடையில் ஏற்பட்ட மோதல் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. காட்டு யானையின் ஆக்ரோஷத்தால், மற்ற கும்கிகள் பின்வாங்க, அர்ஜுனா மட்டும் தனி ஆளாக நின்று, காட்டு யானையுடன் சண்டை போட்டு உள்ளது.
காட்டு யானை தந்தத்தால் குத்தியதில், கும்கி அர்ஜுனாவின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் ரத்தம் சொட்ட, சொட்ட அர்ஜுனா, காட்டு யானையுடன் சண்டையிட்டது.
இறுதியில் அர்ஜுனாவின் தாக்குதலை தாங்க முடியாமல், காட்டு யானை பின்வாங்கிச் சென்ற காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள், 'மிஸ் யு அர்ஜுனா' என பதிவிட்டு வருகின்றனர்.