ஜார்க்கண்டில் தொகுதி பங்கீட்டை ஒரு வழியாக முடித்தது ' இண்டியா' கூட்டணி! யாருக்கு எத்தனை தொகுதிகள்
ஜார்க்கண்டில் தொகுதி பங்கீட்டை ஒரு வழியாக முடித்தது ' இண்டியா' கூட்டணி! யாருக்கு எத்தனை தொகுதிகள்
UPDATED : நவ 02, 2024 10:11 PM
ADDED : நவ 02, 2024 10:07 PM

ராஞ்சி: நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜார்க்கண்டில் தொகுதி பங்கீட்டை ' இண்டியா ' கூட்டணி சுமூகமாக முடித்தது. இங்கு 3 தொகுதிகளில் மட்டும் நட்பு ரீதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு, பா.ஜ., தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால், மறுபுறம் அம்மாநிலத்தை ஆளும் ' இண்டியா' கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவியது. எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என ஆர்ஜேடி உள்ளிட்ட சில கட்சிகள் அதிருப்தியில் இருந்தன. இதனை முடிவுக்கு கொண்டு வர அக்கட்சி தலைவர்கள் கூடி பேசி வந்தனர். இதன் முடிவில், தற்போது தொகுதி பங்கீடு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி,
ஜே.எம்.எம்., -43
காங்கிரஸ்-30
ஆர்ஜேடி -06
சிபிஐ-எம்எல்-04 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இருப்பினும், தன்வார் தொகுதியில் ஜேஎம்எம்- சிபிஐ எம்எல் கட்சிகள் நட்பு ரீதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமிறங்குவது என முடிவு செய்துள்ளன. மேலும், சத்தார்பூர் மற்றும் பிஷ்ராம்பூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகளும் நட்பு ரீதியில் எதிர்த்து போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளது.