ADDED : பிப் 22, 2024 11:09 PM

மல்லேஸ்வரம்: ஆறு தொகுதிகளின் அரசியல் நிலவரம் குறித்து, பா.ஜ., தலைவர்கள் நேற்று பெங்களூரில் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், பா.ஜ., தரப்பில் நேற்று முதல் மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மேலிட தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வால் தலைமையில், பெங்களூரு, பெங்., ரூரல் மண்டல பிரமுகர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், பெங்., நகரின் மூன்று லோக்சபா எம்.பி.,க்களான சதானந்தகவுடா, பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா, கோலார் எம்.பி., முனுசாமி, இரண்டு மண்டலங்களுக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கோலார், சிக்கபல்லாப்பூர், பெங்., ரூரல், பெங்., தெற்கு, பெங்., மத்திய, பெங்., வடக்கு ஆகிய ஆறு லோக்சபா தொகுதிகளின் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தேர்தலுக்கு தயாராகும் வகையில், அடுத்தகட்ட பிரசார யுக்தி குறித்து மேலிட பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, மாநில காங்கிரஸ் அரசின் தோல்விகள் குறித்தும்; மத்திய பா.ஜ., அரசின் சாதனைகள் குறித்தும், வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு விளக்குதல்;
மகளிர், இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசாரம் செய்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.