ADDED : அக் 21, 2024 12:29 AM
நெலமங்களா : கடன் வாங்கியவர், வட்டி கட்டவில்லை என்பதால், அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, நெலமங்களாவின் மாதநாயகனஹள்ளியில் வசிப்பவர் ரவிகுமார், 39. இவர் வட்டி தொழில் செய்கிறார்.
இவரிடம் ஒருவர், 70,000 ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் சரியான நேரத்துக்கு கடன் தொகையை செலுத்தவில்லை; வட்டி பணமும் கொடுக்கவில்லை.
அசலையும், வட்டியையும் அடைக்கும்படி தகராறு செய்தார். நபரும் 30,000 ரூபாய் கொடுத்தார். மிச்சமுள்ள 40,000 ரூபாய்க்கு வட்டி கட்டும்படி ரவிகுமார் தொந்தரவு கொடுத்தார்.
வட்டி பணத்துக்காக அவ்வப்போது நபரின் வீட்டுக்கு வருவார். அவரது, 17 வயது மகளுக்கு தொல்லை கொடுத்தார். அதுமட்டுமின்றி சிறுமியை பலவந்தமாக முத்தமிட்டார்.
இதை மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்.
நேற்று காலை வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த ரவிகுமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையறிந்த தந்தை, மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசாரும், ரவிகுமாரை கைது செய்தனர். அவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவாகியுள்ளது.

