ADDED : ஜன 11, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராம்நகர்: பேத்தியை பலாத்காரம் செய்த, 65 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
ராம்நகர், மாகடியின், குதுாரில் வசிக்கும் 12 வயது சிறுமி, மனநலம் பாதித்தவர். இதே பகுதியில் வசிக்கும் நரசய்யா, 65, என்பவருக்கு சிறுமி பேத்தி முறை வேண்டும். நேற்று மதியம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.
இதை கவனித்த நரசய்யா, சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக ஆசை காண்பித்து, தன் வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்தார். அழுது கொண்டே பெற்றோரிடம் வந்த சிறுமி, நடந்ததை கூறினார்.
சிறுமியின் பெற்றோரும், கிராமத்தினரும் முதியவரை பிடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். குதுாரு போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.