வாலிபரை தாக்கிய விவகாரம் கள்ளக்காதல் தகராறு அம்பலம்
வாலிபரை தாக்கிய விவகாரம் கள்ளக்காதல் தகராறு அம்பலம்
ADDED : செப் 22, 2024 11:18 PM
பாகல்கோட்,: கோவிலுக்குள் புகுந்ததால் வாலிபரை, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் வழக்கில், திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் தாக்கியது அம்பலமாகி உள்ளது.
பாகல்கோட் பாதாமி உகலவட்டா கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் மாதரா, 31. இவரை கடந்த 14ம் தேதி இரவு, ஒரு கும்பல் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால், கோவிலுக்குள் சென்று வந்ததால் என்னை தாக்கினர் என்று, போலீசில் அர்ஜுன் புகார் செய்தார். பாதாமி போலீசார் விசாரித்தனர். கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் நிங்கரெட்டி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், போலீசாரின் விசாரணையில், கோவிலுக்குள் சென்று வந்ததால், தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது தெரிந்தது. நிங்கரெட்டியின் உறவுக்கார பெண்ணுக்கும், அர்ஜுனுக்கும் இடையில் கள்ளக்காதல் இருந்தது. பின், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
அந்த பெண் கள்ளக்காதலை கைவிட்டார். இதனால் பெண்ணை, அர்ஜுன் மிரட்டினார். இதுபற்றி அறிந்த நிங்கரெட்டி, அர்ஜுனை மின்கம்பத்தில் கட்டி வைத்து, தாக்கியது தெரிந்து உள்ளது.