இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி உரை
இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி உரை
UPDATED : ஜூலை 27, 2024 06:06 PM
ADDED : ஜூலை 27, 2024 11:21 AM

புதுடில்லி: ‛‛ 2047 ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் நோக்கமாக உள்ளது. இதனை நிறைவேற்றுவதில், மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கலாம்'', என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் தலைமை
நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிடி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கொள்கைகளை இந்த அமைப்பு வடிவமைக்கிறது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை
இக்கூட்டதில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக பிஹார் சார்பில், துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா கலந்து கொண்டனர். பிஹாரைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்கள் நிடி ஆயோக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
9வது கூட்டம்
நிடி ஆயோக் கூட்டம், டில்லியில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடந்தது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும், திட்டங்களை வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டு இந்த கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ., மற்றும் அக்கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியர்களின் நோக்கம்
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக நிடி ஆயோக் ‛ எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 2047 ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் நோக்கம் ஆக உள்ளது. இந்த இலக்கை நிறைவேற்ற, மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் முக்கிய பங்காற்றலாம்.
இளைஞர்கள் நிறைந்த நாடு
நாம் சரியான திசையில் செல்கிறோம். நூறாண்டுகளுக்கு ஒரு முறை வரும் தொற்று நோயை தோற்கடித்தோம். நமது மக்கள் முழு உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் உள்ளனர். மாநிலங்களுடன் இணைந்து முயற்சி செய்து, 2047 ல் வளர்ந்த பாராதம் என்ற நோக்கத்தை நிறைவேற்றுவோம். வளர்ந்த மாநிலங்கள், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும். இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா. நமது பணியாளர்கள் திறன் காரணமாக, இந்தியா உலகத்திற்கு பெரிய ஈர்ப்பாக உள்ளது. நமது இளைஞர்கள், திறமையான மற்றும் வேலைவாய்ப்பு உள்ள பணியாளர்களாக மாற்றுவதை நாம் இலக்காக கொள்ள வேண்டும். திறன், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் வேலை சார்ந்த அறிவு ஆகியவை வளர்ந்த இந்தியாவுக்கு முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.
புறக்கணிப்பு
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் ஆளும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் ஆகியோர் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். டில்லி அரசும், இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை
இக்கூட்டதில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக பிஹார் சார்பில், துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா கலந்து கொண்டனர். பிஹாரைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்கள் நிடி ஆயோக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.