மினி ஒலிம்பிக்ஸ் போட்டி 20ம் தேதி நிறைவு கனவை நனவாக்க விளையாடும் மாணவ - மாணவியர்
மினி ஒலிம்பிக்ஸ் போட்டி 20ம் தேதி நிறைவு கனவை நனவாக்க விளையாடும் மாணவ - மாணவியர்
ADDED : நவ 17, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில், கர்நாடக ஒலிம்பிக்ஸ் அசோசியேஷன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் மூன்றாவது மினி ஒலிம்பிக்ஸ் போட்டி, நடந்து வருகிறது. இப்போட்டி, வரும் 20ம் தேதி நிறைவடைகிறது.
மினி ஒலிம்பிக்கில் பங்கேற்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் 4,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
நான்காம் நாளான நேற்று, மாணவ - மாணவியர் பலரும் தங்கள் கனவை நோக்கி பயணித்தனர்.
நீச்சல், பளு துாக்குதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ஷாட்புட், ஈட்டி எறிதல், பேட்மின்டன், ஜூடோ, கோ கோ, ஹாக்கி, வாலிபால், கால்பந்து, கபடி, கூடைப்பந்து, துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்தன.
போட்டியில் மாணவ - மாணவியருக்கு அவர்களின் பெற்றோர், பொது மக்கள் கைகளை தட்டிஉற்சாகப்படுத்தினர்
-- நமது நிருபர் -.