ஓட்டுச்சாவடியில் வாக்காளரை எம்.எல்.ஏ., தாக்கியதால் பரபரப்பு
ஓட்டுச்சாவடியில் வாக்காளரை எம்.எல்.ஏ., தாக்கியதால் பரபரப்பு
UPDATED : மே 13, 2024 07:57 PM
ADDED : மே 13, 2024 07:45 PM

தெனாலி : ஆந்திராவில் ஒட்டு போட வந்த வாக்காளர் ஒருவருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கு இடையே ஓட்டுச்சாவடியில் அடிதடி சம்பவம் நடந்துள்ளது
ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் ஒட்டளித்தனர்.
இந்நிலையில், தெனாலி தொகுதியில் ஓட்டுச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர். அப்போது ஆளும் ஒய்.எஸ்.ஆர்.,காங். கட்சி எம்.எல்.ஏ., சிவக்குமார் வரிசையில் நிற்காமல் சென்றார். அவரை இடைமறித்த வரிசையில் வருமாறு கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., சிவக்குமார் வாக்குவாதம் செய்தார். பின் வாக்காளரை கன்னத்தில் அறைந்தார்.
பதிலுக்கு வாக்காளரும் எம்.எல்.ஏ.,வை திருப்பி தாக்கினார். பின்னர் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனார். அங்கு ஓட்டுப்போட வந்த பெண்கள் அலறியடித்து ஓடினர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் சமரசப்படுத்தினர்.