பழம் தின்ற குரங்கு படுத்து உறங்கியது; மடியில் இடம் தந்த சசி தரூர் மகிழ்ச்சி!
பழம் தின்ற குரங்கு படுத்து உறங்கியது; மடியில் இடம் தந்த சசி தரூர் மகிழ்ச்சி!
ADDED : டிச 04, 2024 05:59 PM

திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் மடியில் வந்து அமர்ந்து குரங்கு ஒன்று, வாழைப்பழத்தை சாப்பிட்டு, அவரது மடியிலேயே குட்டித் தூக்கம் போட்ட நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான சசி தரூர், இன்று காலை வழக்கம் போல வீட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு குட்டி, உரிமையுடன் சசி தரூரின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. அவர் கொடுத்த பழத்தை சாப்பிட்டு விட்டு, அவரது மடியிலேயே தூங்கி விட்டது.
அந்தப் போட்டோக்களை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், சில தகவல்களையும் பதிவிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இன்று காலை பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த குரங்கு ஒன்று என் மடியில் ஏறி அமர்ந்து கொண்டது. ரொம்ப பசியுடன் காணப்பட்ட அந்த குரங்கு, நாங்கள் கொடுத்த இரு வாழைப்பழங்களையும் சாப்பிட்டு முடித்தது. பின்பு, என்னுடைய மடியிலேயே தலைவைத்து தூங்கி விட்டது. இது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது.
வனவிலங்குகள் மீது எப்போதுமே எனக்கு மதிப்புண்டு. இருந்தாலும், குரங்கு கடித்தால் ரேபிஸ் ஊசி போட வேண்டியது வருமே, என்ற அச்ச உணர்வு என்னுள் இருந்து கொண்டே தான் இருந்தது. எனவே, பொறுமையாக இருந்து, அமைதியான முறையில் வரவேற்று, குரங்கிடம் மென்மையாக நடந்து கொண்டேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

