ADDED : நவ 09, 2024 11:23 PM

பெலகாவி: கணவரின் சந்தேகத்தால், 5 வயது மகனை குத்திக் கொலை செய்த தாய், தற்கொலைக்கு முயற்சித்தார்.
பெலகாவியின் சிக்கோடியை சேர்ந்தவர்கள் பாக்யஸ்ரீ - ராகுல் தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து வயதில் சாத்விக் என்ற மகன் இருந்தார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராகுல், அடிக்கடி சண்டை போட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு, இவர்களிடையே சண்டை ஏற்பட்டது. கோபமடைந்த பாக்யஸ்ரீ, குழந்தையுடன் தனது பெற்றோர் ஊருக்கு சென்றுவிட்டார்.
மனைவியின் வீட்டுக்கு சென்ற ராகுல், அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார். நேற்று காலையில் மீண்டும், இருவரிடையே சண்டை ஏற்பட, வெறுத்துபோன பாக்யஸ்ரீ, உறங்கிக் கொண்டிருந்த தனது மகனை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்தார்.
சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், குழந்தையையும், பாக்யஸ்ரீயையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தற்கொலைக்கு முயற்சித்த பாக்யஸ்ரீ, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காக்வாட் போலீசார் விசாரிக்கின்றனர்.