ADDED : ஏப் 25, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஹல்காம்: காஷ்மீர் பஹல்காமில், 26 பேர் பயங்கவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒரு வெளிநாட்டரும் இறந்துள்ளார். அவர் நமது அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த, 27 வயது இளைஞர் சுதீப் நியூபனே. இவர் பொதுசுகாதார கல்வி பயன்றவர்.
சமூக சேவை பணிகளில் ஈடுபாடு கொண்டவர். விடுமுறையை கழிக்க, தனது தாய் ரிமா மற்றும் சகோதரியுடன் பஹல்காம் வந்துள்ளார். அவர் வெளிநாட்டவராக இருந்தும், ஹிந்து என தெரிந்ததால், பயங்கரவாதிகள் ஈவிரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.
கொல்லப்படுவதற்கு முன், உன் பெயர் என்ன என, பயங்கரவாதிகள் கேட்டுள்ளனர். 'சுதீப்' என கூறியதும், 'மதம் பிடித்த' பயங்கரவாதிகள் தலையில் குறிவைத்து சுட்டுள்ளனர் என, அவரது தாத்தா சோகத்துடன் தெரிவித்தார்.

