முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பணியாற்ற புதிய முதல்வர் உறுதி
முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பணியாற்ற புதிய முதல்வர் உறுதி
ADDED : பிப் 20, 2025 10:32 PM
'டில்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக முழு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவேன்' என, புதிய முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் நகராட்சி கவுன்சிலருமான ரேகா குப்தா, சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், ஆதிஷி ஆகியோருக்குப் பிறகு டில்லியின் நான்காவது பெண் முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக அவர் நேற்று முன்தினம் சட்டசபை பா.ஜ., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன் 'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
என் மீது நம்பிக்கை வைத்துள்ள பா.ஜ., தலைமைக்கு நன்றி. முதல்வர் பதவியின் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த அனைத்து உயர் தலைமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. டில்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், அதிகாரமளித்தல் மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக முழு நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக நான் உறுதியளிக்கிறேன்.
டில்லியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் இந்த முக்கியமான வாய்ப்பை நான் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள உறுதிபூண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- நமது நிருபர் -

