
ரு தலைவர், அவரது கட்சியை அவரது குடும்பம் போலவும், கட்சி தொண்டர்களை குடும்ப உறுப்பினர்கள் போலவும் பார்க்க வேண்டும். உங்கள் பிள்ளைகளை நேசிப்பது போல் கட்சித் தொண்டர்களை நேசிக்க வேண்டும். நான் இன்று இருக்கும் நிலைக்கு ஏராளமான கட்சி தொண்டர்களின் அர்ப்பணிப்பே காரணம்.
நிதின் கட்கரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,
குறி வைக்கின்றனர்!
வக்ப் சட்ட திருத்த மசோதா பிரிவினை திட்டத்துடன் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியதை போல் அரசு ஒவ்வொரு சிறுபான்மை சமூகத்தையும் குறிவைக்கிறது. தற்போது சர்ச்சுகளிடம் 7 கோடி ஏக்கர் நிலங்கள் இருப்பதாக பா.ஜ.,வினர் பேசத் துவங்கி உள்ளனர்.
சுப்ரியா ஸ்ரீநாத், சமூக வலைதள பிரிவு தலைவர்,காங்கிரஸ்
வக்ப் விவகாரம் முடிந்தது!
வக்ப் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு செல்வதாக இல்லை. இந்த சட்ட திருத்தம் குறித்து எங்கள் கவலைகளை பதிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியை பொறுத்தவரை இந்த விவகாரம் முடிந்தது. மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்ப் நிலங்கள் மீது கண் உள்ளது.
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா, உத்தவ் அணி

