ADDED : செப் 30, 2024 10:43 PM
பீதர் : பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பீதர் நியூ டவுன் போலீஸ் நிலைய எஸ்.ஐ., மல்லம்மா, 45, போலீஸ்காரர் தன்ராஜ், 32. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பீதர் மாதவ நகரில் உள்ள தனியார் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு மையத்தில், பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.
மல்லம்மா சரியான நேரத்தில் பணிக்கு சென்றுவிட்டார். தன்ராஜ் தாமதமாக வந்துள்ளார். இதுகுறித்து மல்லம்மா கேள்வி கேட்டதால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மல்லம்மாவை பிடித்துத் தள்ளி, தன்ராஜ் தாக்கினார். இதில் மல்லம்மாவின் தலையில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக பீதர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரில் நியூ டவுன் போலீஸ் நிலையத்தில் தன்ராஜ் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., பிரதீப் குந்தி நேற்று உத்தரவிட்டார்.