பதவி எனது அண்ணனை மாற்றிவிட்டது: தங்கை ஷர்மிளா புகார்
பதவி எனது அண்ணனை மாற்றிவிட்டது: தங்கை ஷர்மிளா புகார்
ADDED : மே 06, 2024 09:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமராவதி: முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததும் பதவி அவரை முற்றிலுமாக மாறிவிட்டது என ஜெகன் மோகன் ரெட்டி மீது அவரது தங்கை ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர சட்டசபைக்கும், லோக்சபா தொகுதிகளுக்கும் சேர்த்து மே.13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஷர்மிளா பேசியது, முந்தைய தேர்தலில் எனது அண்ணன் ஜெகன் மோகனை முதல்வராக்க அவருடன் கட்சியில் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
அவருக்காக 3,200 கி.மீ., பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளேன். ஆனால் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்த பின் முற்றிலுமாக மாறிவிட்டார். கொள்கைகளை மறந்துவிட்டார். பதவி அவரை மாற்றிவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.