sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரு அரண்மனையை குறி வைக்கும் அரசை...'விட மாட்டோம்!' 'சட்டப்போராட்டம் நடத்துவோம்' என ராணி அறிவிப்பு

/

பெங்களூரு அரண்மனையை குறி வைக்கும் அரசை...'விட மாட்டோம்!' 'சட்டப்போராட்டம் நடத்துவோம்' என ராணி அறிவிப்பு

பெங்களூரு அரண்மனையை குறி வைக்கும் அரசை...'விட மாட்டோம்!' 'சட்டப்போராட்டம் நடத்துவோம்' என ராணி அறிவிப்பு

பெங்களூரு அரண்மனையை குறி வைக்கும் அரசை...'விட மாட்டோம்!' 'சட்டப்போராட்டம் நடத்துவோம்' என ராணி அறிவிப்பு

3


ADDED : ஜன 26, 2025 07:47 AM

Google News

ADDED : ஜன 26, 2025 07:47 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: பெங்களூரு அரண்மனையை, 'ஆட்டையை போட' சித்தராமையா அரசு முயற்சிக்கிறது. “எங்களுக்கு அநியாயம் நடந்தால், சட்டப்போராட்டம் நடத்துவோம். அரண்மனைக்கு நாங்களே உரிமையாளர்கள்,” என, அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரமோதாதேவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.'விட மாட்டோம்!'

சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, பெங்களூரு அரண்மனைக்குச் சொந்தமான பல நுாறு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும், இதற்காக இழப்பீடு வழங்கவும் 1996ல் மாநில அரசு முடிவு செய்தது. இந்த இழப்பீட்டுத் தொகை குறைவாக இருந்ததால் இதற்கு அரச குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேல் முறையீடு


இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரச குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். இங்கு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரச குடும்பத்தினர் மேல் முறையீடு செய்தனர்.

விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கையகப்படுத்தும் அரண்மனை நிலத்துக்கு 3,011.66 கோடி ரூபாய் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. வெறும் 2 கி.மீ., சாலைக்காக நிலத்துக்கு மட்டும் 3,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதா என அரசு தயக்கம் காட்டுகிறது.

இதற்கிடையே பெங்களூரில் வாகன போக்குவரத்து நெருக்கடி, நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சாலையை அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரண்மனை நிலத்தை கையகப்படுத்த, அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சர்ச்சைக்கு காரணமானது.

அரச குடும்பத்தினருக்கும், மாநில அரசுக்கும் இடையே 'பனிப்போரு'க்கு வழி வகுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து, ராணி பிரமோதா தேவி, மைசூரில் நேற்று அளித்த பேட்டி:

பெங்களூரு அரண்மனை இடத்தை கையகப்படுத்த, அவசர சட்டம் கொண்டு வருவதற்கு, மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அரண்மனையை குறிவைக்கின்றனர். எங்களுக்கு அநியாயம் நடந்தால், சட்டப்போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம்.

அவசர சட்டம்


இப்போதும் பெங்களூரு அரண்மனை இடத்துக்கு, நாங்களே உரிமையாளர்கள். ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மற்றும் அவரது அக்கா, தங்கைகளும் கூட, உரிமையாளர்கள் பட்டியலில் உள்ளனர். இன்னும் பலரின் பெயர் உள்ளது. அரண்மனை பகுதியில் ஏற்கனவே சாலைக்கு பயன்படுத்தப்பட்ட இடமும் எங்களுடையதே. சாலைக்கு 15.36 ஏக்கர் இடத்தை பயன்படுத்தியுள்ளனர்.

டி.டி.ஆர்., எனும் டிரான்ஸ்பெரபல் டெவலப்மென்ட் ரைட்ஸ் கொடுக்கக் கூடாது என்பதால், அவசர சட்டம் கொண்டு வர முன்வந்துள்ளனர்.

டி.டி.ஆர்., கொடுப்பதாக நீதிமன்றத்தில் கூறினர். ஆனால் இப்போது 3,000 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது என்பதால், வேறு விதமாக நடந்து கொள்கின்றனர். இதை கண்டித்து நாங்கள் சட்டப்போராட்டம் நடத்துவோம்.

அமைச்சரவை முடிவை நானும் பார்த்தேன். பெங்களூரு அரண்மனை இடத்தை பயன்படுத்த, 1996ல் நாங்கள் தடை உத்தரவு பெற்றுள்ளோம்.

அந்த ஆணை எங்களிடம் உள்ளது. உச்ச நீதிமன்றமும் கூட அரண்மனை இடம், அரச குடும்பத்தினருடையது என்பதை உறுதி செய்துள்ளது. கர்நாடக அரசின் விருப்பப்படியே, அனைத்தும் நடந்துள்ளது. அரசுக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை.

சர்ச்சை


அரண்மனை மைதானத்தில், இத்தனை ஆண்டுகள் நடந்த செயல்பாடுகள், அரசுக்கு தெரியாமல் நடக்கவில்லை. எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அரசின் கவனத்துக்கு வரும்.

கடந்த, 2014ல் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், அரண்மனை இடத்துக்கு ஸ்ரீகண்டதத்த உடையார் மற்றும் அவரது அக்கா, தங்கைகள் உரிமையாளர்கள் என, கூறியுள்ளது.

நாங்கள் யாருக்கும் தொந்தரவு கொடுத்தது இல்லை. ஆனால் எங்களை குறிவைக்கின்றனர். இந்த சர்ச்சை பல ஆண்டுகளாக நடக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. 40 ஆண்டுகளாக போராடுகிறோம். இதை நிறுத்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., - எம்.எல்.சி., கண்டனம்

காங்கிரஸ் அரசின் செயலுக்கு எதிர்க்கட்சியினரும் கூட, கண்டனம் தெரிவித்துள்ளனர்.மைசூரில் பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் அளித்த பேட்டி:பெங்களூரு அரண்மனை இடம் தொடர்பாக, அவசர சட்டம் வெளியிட சித்தராமையா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சித்தராமையா முதல்வராக வரும்போதெல்லாம், அரண்மனை விஷயத்தில் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.அவசர சட்டம் வெளியிடுவதற்கு பதிலாக, ராணி பிரமோதா தேவியுடன் அமர்ந்து பேசி, செட்டில்மென்ட் செய்திருக்கலாம். அதை விட்டு விட்டு, கையில் அதிகாரம் உள்ளது என்பதற்காக, அவசர சட்டம் கொண்டு வருவது சரியல்ல.மைசூரு மஹாராஜாவை பற்றி, முதல்வர் சித்தராமையா அலட்சியமாக பேசுவது ஏற்புடையது அல்ல. அரச குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுக்கிறார். முதல்வர் இது போன்று நடந்து கொள்ளக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us