ADDED : ஜன 29, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலகட்டாபுரா: பெங்களூரு, தலகட்டாபுரா அருகே, சிக்கேகவுடனபாளையாவில் வசித்தவர் காலப்பா, 45. ரவுடியான இவர் மீது கெங்கேரி, தாவரகெரே போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளன.
நேற்று மதியம் சிக்கேகவுடனபாளையா பகுதியில், காலப்பா பைக்கில் சென்றார். அவரை வழிமறித்து ஒரு கும்பல் தகராறு செய்தது. பின்னர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து, அந்த கும்பல், காலப்பாவை தாக்கிவிட்டு தப்பியது. இதில் காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காலப்பாவை மீது கொலை வழக்குகள் இருப்பதால், பழிக்கு, பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என, தலகட்டாபுரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.