பாக்., கெஞ்சலுக்கு காரணம் இந்திய தாக்குதலின் உக்கிரம் தான்; டிரம்ப் இல்லை: சசிதரூர் திட்டவட்டம்
பாக்., கெஞ்சலுக்கு காரணம் இந்திய தாக்குதலின் உக்கிரம் தான்; டிரம்ப் இல்லை: சசிதரூர் திட்டவட்டம்
UPDATED : ஆக 20, 2025 09:11 AM
ADDED : ஆக 20, 2025 09:09 AM

புதுடில்லி: தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியதற்கு காரணம், இந்தியாவின் துல்லிய தாக்குதல் மட்டுமே. அமெரிக்க அதிபர் டிரம்ப் காரணமில்லை என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் இன்று எங்கே? அவர்கள் எப்போதாவது நல்ல அண்டை நாடுகளாக இருக்க முடியுமா? என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் சசி தரூர் பேசியதாவது: மே 9-10ம் தேதி இரவு நடத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதல்களும், மே 10ம் தேதி பாகிஸ்தான் எதிர் தாக்குதலைத் தடுக்கும் இந்தியாவின் திறனும், பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தனது இந்திய சகாவுக்கு அமைதியைக் கோரி அழைப்பு விடுத்ததும் தான் போர் நிறுத்தத்திற்கு காரணம்.
தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியதற்கு காரணம், இந்தியாவின் துல்லிய தாக்குதல் மட்டுமே. அமெரிக்க அதிபர் டிரம்ப் காரணமில்லை. ஆபரேஷன் சிந்தூர் மூலம், பயங்கரவாதம் நம் மீது கட்டவிழ்த்து விடப்படுவதைப் பற்றி நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்ற மிகத் தெளிவான செய்தியை இந்தியா அனுப்பியுள்ளது.நமது நாட்டின் மிகப்பெரிய முன்னுரிமை, மிகப்பெரிய நோக்கம் நமது மக்களின் வளர்ச்சி.
நமது எல்லைகளின் அமைதி மற்றும் செழிப்பு நமது தேசிய நலன்களுக்கு இன்றி அமையாதது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும். சர்வதேசஅரங்கில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதையும் உறுதிசெய்கிறோம். எல்லைக்கு அப்பால் இருந்து ஊசிகளால் நாம் தொடர்ந்து குத்தப்பட்டு, நமது உறவுகளை இழந்தால், இந்த ஆசைகள் வெற்றுத் தனமாகிவிடும். இவ்வாறு சசி தரூர் பேசினார்.