ADDED : அக் 25, 2025 07:35 AM

வரும் 2047ம் ஆண்டுக்குள், 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடைவதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். பெண்களின் தலைமையில் இயங்கும் சமூகம், அதிக மனிதநேயத்துடன் இருப்பதுடன், நல்ல திறனுடனும் செயல்பட வா ய்ப்புள்ளது. நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் உந்துசக்தியாக இருக்கின்றனர்.
திரவுபதி முர்மு ஜனாதிபதி
உண்மையான தீபாவளி!
பீஹார் சட்டசபை தேர்தலில், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி அவமானகரமான தோல்வியை சந்திக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நவ., 14ல், உண்மையா ன தீபாவளியை இங்குள்ள ம க்கள் கொண்டாடுவர். ஒற்றுமை இல்லாமல், கா ங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூ ட்டணியினர் சண்டையிட்டு வருகின்றனர்.
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
'ஸ்லீப்பர்' பஸ்களுக்கு தடை! '
ஸ்லீப்பர் கோச்' பஸ்களை திரும்பப் பெறுவது குறித்து, மத்திய அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். இந்த வகை பஸ்களில், தீ விபத்து போன்ற சம்பவங்களில் பயணியர் உயிர் பிழைப்பது கடினம். சீனாவில், இந்த பஸ்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுஉள்ளது. நம் நாட்டிலும் தடை செய்ய வேண்டும்.
கவிதா நிறுவனர், தெலுங்கானா ஜக்ருதி

