இன்று முதல் பட்ஜெட் மீது விவாதம் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகள் தயார்
இன்று முதல் பட்ஜெட் மீது விவாதம் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகள் தயார்
ADDED : பிப் 19, 2024 06:57 AM
பெங்களூரு: இன்று மீண்டும் ஆரம்பமாகும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பரபரப்பு காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிப்ரவரி 16ம் தேதி, 3.71 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் வாக்குறுதி திட்டங்களுக்கு, 52,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,
வரலாற்றில் முதன் முறையாக, கர்நாடகாவின் கடன் அளவு, 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதை முன் வைத்து, போராட்டம் நடத்தி அரசை நெருக்கடியில் சிக்க வைக்க, எதிர்க்கட்சிகள் தயாராகின்றன.
இதற்கு பதிலாக, முந்தைய அரசுகள் வாங்கிய கடன் புள்ளி - விபரங்களுடன், பதிலடி கொடுக்க முதல்வர் சித்தராமையா தயாராக இருக்கிறார்.
ஏற்கனவே, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்திய முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், பா.ஜ.,வின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க, ஒரு படையையே தயாராக்கியுள்ளனர்.
இன்று மீண்டும் முதல் ஆரம்பமாகும், பட்ஜெட் கூட்டத்தொடரில், காரசாரமான விவாதங்கள், பரஸ்பரம் குற்றசாட்டுகள், வெளி நடப்பு, தர்ணாவுக்கு பஞ்சமிருக்காது.

