தாமதமாக வந்த ஆசிரியையை அடித்து உதைத்த பள்ளி முதல்வர்
தாமதமாக வந்த ஆசிரியையை அடித்து உதைத்த பள்ளி முதல்வர்
ADDED : மே 04, 2024 06:45 PM

ஆக்ரா: உ.பி.யில் தாமதமாக பள்ளிக்கு வந்த ஆசிரியையை , பள்ளி முதல்வர் சரமாரியா தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உ.பி. மாநிலம் ஆக்ராவின் சீகானா கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றிவரும் குஞ்சன்சவுத்ரி என்ற ஆசிரியை அடிக்கடி தாமதமாக வருவதாக எழுந்த புகாரில் பள்ளி முதல்வர் பல எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.நேற்று வழக்கம் போல் ஆசிரியை குஞ்சம் சவுத்ரி தாமதமாக பள்ளிக்கு வந்துள்ளார். உடன் பள்ளி முதல்வர் அவரை கடுமையாக திட்டியும், கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பில் முடிந்தது.
ஆசிரியையை முதல்வர் சரமாரியாக தாக்கினார்.
இதனை அங்கிருந்த ஒருவர் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து ‛எக்ஸ்' தளத்தில் பதிவேற்றினார்.அதனை 2 லட்சம் பேர் பகிர்ந்ததால் அது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இசம்பம்வ தொடர்பாக இரு தரப்பும் போலீசில் புகார் கூறப்பட்டும் போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர்.