ADDED : ஆக 21, 2025 11:55 PM

மத்திய பா.ஜ., அரசு 2014 முதல் அரசியலமைப்பு நமக்கு வழங்கிய உரிமைகளை பறிக்கும் வகையில் பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று தான் சிறை செல்லும் முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி இழக்கும் சட்ட திருத்தம். இவை அரசியல்அமைப்பை அரிக்கும் கறையான்கள்.
- கபில் சிபல்,ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை
சந்திரபாபுவுக்கான சட்டம்!
பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்காக பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிக்கும் சட்டத்தை மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. இதை வைத்து அவர்களை மிரட்ட முடியும். அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கில் சீக்கிரம் ஜாமின் கிடைப்பதில்லை.
- தேஜஸ்வி யாதவ், பீஹார் எதிர்க்கட்சி தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
நாடே வரவேற்கும் சட்டம்!
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் கடும் குற்றச்சாட்டுகளில் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களின் பதவியை பறிக்கும் சட்டத்தை நாடே வரவேற்கும். இது எந்த ஒரு கட்சிக்கும் எதிரானது அல்ல; அனைவருக்குமான சட்டம் இது.
- கிஷண் ரெட்டி, மத்திய அமைச்சர், பா.ஜ.,