போலீஸ் மீது துப்பாக்கி சூடு 3 பேரை தேடும் பணி தீவிரம்
போலீஸ் மீது துப்பாக்கி சூடு 3 பேரை தேடும் பணி தீவிரம்
ADDED : ஜன 23, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீரட்:போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கன்கர்கெடா பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த காரில், சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பதை அறிந்த போலீசார், காரை நிறுத்த கையால் சைகை காட்டினர்.
ஆனால், காரை நிறுத்தாமல் மர்ம நபர்கள், வேகமாக சென்றனர். மேலும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டனர். இரண்டு போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின், அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
மேலும், போலீசாரை துப்பாக்கியால் சுட்ட மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தனிப்படையினர், மூவரையும் தேடி வருவதாகவும், போலீசார் கூறினர்.

