ADDED : பிப் 21, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை, மஹாராஷ்டி ராவின், மும்பை குற்றப்பிரிவு போலீசார், தாதர் கிழக்கு பகுதியில் இருக்கும் சுவாமி நாராயண் கோவில் அருகே உள்ள விருந்தினர் இல்லத்தில், நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு தங்கியிருந்த மும்பையைச் சேர்ந்த ஜஹாங்கிர் ஷேக், 29, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜுலாம் ஷேக், 28, ஆகிய இருவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் சோதனையிட்ட போது, 5.4 கிலோ மெபிடிரோன் எனப்படும் போதை மருந்து சிக்கியது. அதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மெபிடிரோன் போதை மருந்தின் சர்வதேச மதிப்பு, 10.08 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அந்த மருந்தை, இருவரும் யாருக்காக எடுத்து வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

