sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியை உறைய வைத்த 'சீரியல் கில்லர்' சிக்கினான்

/

டில்லியை உறைய வைத்த 'சீரியல் கில்லர்' சிக்கினான்

டில்லியை உறைய வைத்த 'சீரியல் கில்லர்' சிக்கினான்

டில்லியை உறைய வைத்த 'சீரியல் கில்லர்' சிக்கினான்


ADDED : ஜன 18, 2025 11:18 PM

Google News

ADDED : ஜன 18, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தொடர் கொலைகளை செய்து தலைநகர் டில்லியை பீதியில் உறைய வைத்த 'சீரியல் கில்லர்' பீஹாருக்கு தப்ப முயன்ற போது ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டான்.

தலைநகர் டில்லியில், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் தொடர் கொலைகள் நடந்தன. இதனால், டில்லி மக்கள் கடும் பீதியில் உறைந்தனர். தீவிர தேடுதலுக்குப் பின், சீரியல் கில்லர் சந்திரகாந்த் ஜா கைது செய்யப்பட்டான். நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜா, திஹார் சிறையில் அடைக்கப்பட்டான்.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் பரோலில் சென்ற சந்திரகாந்த் ஜா தலைமறைவானான்.

டில்லி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது 57 வயதான சந்திரகாந்த் ஜா, பழைய டில்லி ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டான். டில்லி மாநகரப் போலீசின் குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் சஞ்சய் குமார் சைன் கூறியதாவது:

கடந்த 2006ல் டில்லியை பதற வைத்த தொடர் கொலைகளை செய்த சந்திரகாந்த் ஜாவுக்கு மூன்று கொலைகளுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். கடந்த 2023ம் ஆண்டு பரோலில் சென்று தலைமறைவானான். அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக, ஜாவின் குடும்பம், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆகியோரை தனிப்படையினர் உளவு பார்த்தனர்.

தேசிய தலைநகர் பிராந்தியம், அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. பழம் மற்றும் காய்கறி மண்டிகளில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

தீவிர விசாரணையில் சந்தேகத்துக்குரிய ஒரு மொபைல் போன் எண் கிடைத்தது. அது, சந்திரகாந்த் ஜா தற்போது பயன்படுத்தும் மொபைல் போன் எண் என்பதும் தெரிய வந்தது.

பழைய டில்லி ரயில் நிலையத்தில் இருந்து பீஹாருக்கு நேற்று முன் தினம், சந்திரகாந்த் ஜா செல்ல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ரயில் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அனைத்து பயணியரும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டனர். போலீஸ் குழுவைப் பார்த்து தப்பிச் செல்ல முயன்ற சந்திரகாந்த் ஜாவை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஜா, இளைமைக் காலத்தில் டில்லி ஆசாத்பூர் மார்க்கெட் அருகே வசித்தான். வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடி டில்லி வரும் இளைஞர்களுக்கு உதவினான். அதில் பலருக்கு உணவும் இருப்பிடமும் கொடுத்து நட்புடன் பழகி வந்தான். ஆனால், அவர்களுடன் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் கடும் ஆத்திரம் அடைந்து, சிலரை கொடூரமாக கொலை செய்தான். பின், உடல்களை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வீசினான். கொலை செய்த உடல்களை பெரும்பாலும் திஹார் சிறை அருகிலேயே வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அதிலும், தன்னைப் பிடிக்க முடியாது என்று போலீசுக்கு சவால் விடும் வகையில் குறிப்பும் எழுதி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.

முதன் முதலில், 1998ம் ஆண்டு டில்லி ஆதர்ஷ் நகரில் மங்கள் என்ற அவுரங்கசீப் என்பவரை கொலை செய்து, உடலைத் துண்டுதுண்டாக வெட்டி வீசினான். அது, டில்லியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே கைது செய்யப்பட்ட ஜா, 2002ல் விடுதலையானான். அதன்பின், கொலை செய்வதை மீண்டும் துவக்கினான்.

கடந்த 2003ம் ஆண்டு ஜூன் மாதம் தன் கூட்டாளி சேகர் என்பவரை ஹைதர்பூரில் கொலை செய்து, உடலை அலிபூரில் வீசினான். அதேபோல, 2003ம் ஆண்டு பீஹாரில் இருந்து வந்த உமேஷ், தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி திஹார் சிறை அருகே வீசினான். கடந்த 2005ம் ஆண்டு நவம்பரில் குடு என்பவரை கொலை செய்து உடலை மங்கோல்புரியில் வீசினான்.

கடந்த 2006ம் ஆண்டு அக்டோபரில் திருநங்கை அமித்தை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி திஹார் சிறை அருகே வீசினான்.

அதேபோல, 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உபேந்தர் என்பவரை கொலை செய்து, உடல் பாகங்களை திஹார் சிறை 3ம் எண் கேட் அருகே வீசினான்.

மேலும், அதே ஆண்டில் மே மாதம் அசைவ உணவு சாப்பிட்ட திலீப் மீது ஆத்திரம் அடைந்து அவரைக் கொலை செய்து உடல் பாகங்களை திஹார் சிறை முதலவது கேட் அருகே வீசி விட்டு சென்றான்.

கொலை வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் 2013ம் ஆண்டு செய்த மூன்று கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை விதித்தது. பின், 2016ம் ஆண்டில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் 90 நாட்கள் பரோலில் சென்ற சந்திரகாந்த் ஜா, தலைமறைவானான்.

எட்டாம் வகுப்பு வரை படித்த ஜா, 1990ல் டில்லிக்கு வந்தான். கூலி வேலைகள் செய்த வந்த நிலையில் இரண்டு திருமணம் செய்து, ஐந்து பெண் குழந்தைகளை பெற்றான். வெளித்தோற்றத்தில் கனிவான நபராக தோன்றும் ஜா, காட்டுமிராண்டி குணம் கொண்டவன். இவனது வாழ்க்கை குறித்து 'இந்தியன் ப்ரிடேட்டர்' மற்றும் 'தி புட்சர் ஆப் டில்லி' என இரு ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us