sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பகாசுரனை வதம் செய்த பீமன் பூஜித்த சிவலிங்கம்

/

பகாசுரனை வதம் செய்த பீமன் பூஜித்த சிவலிங்கம்

பகாசுரனை வதம் செய்த பீமன் பூஜித்த சிவலிங்கம்

பகாசுரனை வதம் செய்த பீமன் பூஜித்த சிவலிங்கம்


ADDED : ஜன 07, 2025 06:38 AM

Google News

ADDED : ஜன 07, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றான பீமலிங்கேஸ்வரர் கோவிலின் வரலாறு, சிறப்பை பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது.

சிக்கபல்லாபூரில் உள்ள சிறிய நகரமான கைவாராவில் அமைந்து உள்ளது, பீமலிங்கேஸ்வரர் கோவில். கோவிலின் பெயரிலேயே அதன் வரலாறு உள்ளது. சிவபெருமான் லிங்க வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. கோவிலுக்கு செல்வதற்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை உகந்த நாட்களாகும்.

இந்த கோவில், புராண வரலாற்றுக்கு பெயர் பெற்றது. இக்கோவில் அமைந்துள்ள இடம், மகாபாரத காலத்தில் 'கைவர ஏகசக்கரபுரம்' என்று அழைக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள மக்களை, பகாசுரன் என்ற அரக்கன் துன்புறுத்தி வந்தான். இதே பகுதியில் பாண்டவர்கள் வாழ்ந்து வந்து உள்ளனர்.

* முழங்கால் தடம்

பாண்டவர்களில் ஒருவரான பீமன், அரக்கன் பகாசுரன் செய்யும் அக்கிரமங்களை பார்த்து அவனுடன் சண்டையிட்டு கொன்றார். இந்த இடத்தில், பீமன், பகாசுரன் ஆகியோர் முழங்கால் தடத்தை இப்போதும் காணலாம்.

அரக்கனை கொன்ற பின், பீமன் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்து, தவம் இருந்துள்ளார். காலங்கள் கடந்து செல்ல, அந்த இடத்தில், கோவில் உருவாக்கி, ஊர் மக்கள் வழிபட்டனர். கோவிலின் புகழ் மென்மேலும் பரவ துவங்கியது. இதன் விளைவாக, சிவபெருமானை வழிபடுவதற்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் வர துவங்கினர்.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சரியான உடைகள் அணிந்து வர வேண்டும். ஆண்டுதோறும் சிவராத்திரி பூஜைகள் கோலாகமாக கொண்டாடப்படும்.

* திறப்பு நேரம்

தற்போது, கோவில் அதிகாலை 5:30 மணி முதல் முற்பகல் 11:00 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில், யோகிநாராயண மடம், அமர நாராயண கோவில், கன்னிகாபரமேஸ்வரி கோவில் ஆகியவை உள்ளன.

...பாக்ஸ்...

செல்வது எப்படி?

* ரயில்: பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:30 மணிக்கு 06387 என்ற எண்ணுள்ள ரயிலில் ஏறி சிக்கபல்லாபூரில் இறங்கலாம். சிக்கபல்லாபூர் ரயில் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு டாக்சியில் செல்லலாம்

* பஸ்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சிக்கபல்லாபூருக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. அங்கிருந்து 30 கி.மீ., துாரமுள்ள கைவாராவுக்கு பஸ் அல்லது டாக்சி மூலம் செல்லலாம்.

*** -- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us