
ஜனநாயகத்தில் ஆட்சி நிர்வாகம் என்பது அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும். நீதிமன்றங்களிடம் இருக்க முடியாது. அரசு பார்லிமென்டிற்கும், அதன் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் மக்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. அரசை தாண்டிய நிர்வாகம் இருக்கக் கூடாது. அரசே இறுதியானது.
ஜக்தீப் தன்கர்
துணை ஜனாதிபதி
தலைவர் தேர்வில் தாமதம்!
உலகின் மிகப்பெரிய கட்சி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பா.ஜ.,வால் இதுவரை தங்களுக்கான தேசியத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த தடுமாற்றம், பா.ஜ.,வின் உட்கட்சி ஜனநாயகம் பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது. இது, மக்களுக்கு சேவை செய்யும் கட்சியல்ல; அதிகாரத்தை மட்டுமே விரும்பும் கட்சி.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
நேரம் பிடிக்கும்!
நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளிலும், அவர்களின்தேசியத் தலைவர்கள் குடும்ப வாரிசு என்ற ஒரே அடிப்படையில் அந்த பதவிக்கு வந்தவர்கள். ஆனால், பா.ஜ.,வில் கட்சியின் 12 கோடி உறுப்பினர்களில் இருந்து ஒருவரை தேசியத் தலைவராக தேர்வு செய்கிறோம். அதனால் நேரம் பிடிக்கும்.
அமித் ஷா
மத்திய அமைச்சர், பா.ஜ.,

