நீட் தேர்வு முறைகேடு: சீரமைப்புகுழு பரிந்துரையை தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் கெடு
நீட் தேர்வு முறைகேடு: சீரமைப்புகுழு பரிந்துரையை தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் கெடு
UPDATED : ஆக 02, 2024 12:04 PM
ADDED : ஆக 02, 2024 11:49 AM

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேட்டை தொடர்ந்து அமைக்கப்பட்ட சீரமைப்புகுழு, தனது பரிந்துரையை வரும் செப்-30க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் கெடு விதித்துள்ளது.
நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவாக, 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என, பல மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. 40க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாகின.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான பெஞ்ச் விசாரித்தது. இன்றைய விசாரணைக்கு பிறகு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் கோர்ட்டுக்கு இல்லை. அதே நேரத்தில் இஸ்ரோ முன்னாள் சேர்மன் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்வு சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் குழு, தனது பரிந்துரை அறிக்கையை வரும் செப். 30 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தேர்வு முறைகளை வலுப்படுத்த ஏற்று கொள்ளக்கூடிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.